போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் திருப்பூரில் 80 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை

திருப்பூர். பிப். 26: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று திருப்பூரில் வேலை நிறுத்தம் நடந்தது. 80 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

அதே வேளையில், தனியார் பேருந்துகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் காங்கயம் ரோட்டிலுள்ள போக்குவரத்து பணிமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘திருப்பூரில் 160 பேருந்துகள் உள்ளன. கொரோனாவிற்கு பிறகு சில பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. தொடர்ச்சியாக இயங்கிவரும் பேருந்துகளில் 60 சதவிதம் இயக்கப்பட்டது’’ என்றார்.

Related Stories:

>