ஈரோடு அரவிந்த் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

ஈரோடு,பிப்.25: ஈரோடு பெருந்துறை ரோட்டில்,  ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில்  அரவிந்த் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். முகாமில் புற்றுநோய் நிபுணர் டாக்டர் சுதாகர்ரமீஸ்ராஜா டாக்டர்கள், பரகத்துல ரேஷ்மா, ஜெயசங்கர், ஜெயபால், ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். இதில், ரத்த பரிசோதனைகள், இ.சி.ஜி.பரிசோதனை ஆகியன இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

மேலும், நுரையீரல் பாதிப்பு, நிமோனியா, ஆஸ்துமா, மூட்டுவலி, இடுப்பு வலி, எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆலோசனைகள், சர்க்கரை நோய், இரைப்பை, குடல் நோய்கள், புற்றுநோய் சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மனநல மருத்துவம், பிசியோதெரபி சிகிச்சை போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில், செல்வா சேரிட்டபிள் டிரஸ்ட்  பாரதி, ரோசாரியோ, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>