×

வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் சிஎஸ்ஆர் கொடுக்காமல் புகார்தாரர்களை அலைக்கழித்த எழுத்தர் ஆயுதப்படைக்கு மாற்றம்

வேலூர், பிப்.26:புகார்தாரர்களுக்கு சிஎஸ்ஆர் கொடுக்காமல் அலைக்கழித்த எழுத்தரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார். வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றுபவர் குமார். இவர் போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் புகாரை பெறாமல் அலைக்கழிப்பது, பணம் கொடுத்தால்தான் விசாரணை நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில் ஆவணங்கள் காணவில்லை என்று கூறி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அப்போது பொறுப்பு இன்ஸ்பெக்டராக உள்ள லதா, அந்த மனு மீது சிஎஸ்ஆர் அளிக்கும்படி எழுத்தர் குமாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் சிஎஸ்ஆர் கொடுக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எஸ்பி செல்வகுமாருக்கு புகார் சென்றது. இதையடுத்து உடனடியாக நேற்று முன்தினம் இரவு அவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி செல்வகுமார் உத்தரவிட்டார்.

இதற்கிடையே அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை தடுக்கவும் நேற்றுமுன்தினம் இரவு எஸ்பி செல்வகுமார் அரசு போக்குவரத்து பனிமனைகளை ஆய்வு செய்தார். அப்போது, வேலூர் கிருஷ்ணா நகர் பணிமனையில் பாதுகாப்பு பணியில் ஒரே ஒரு போலீசார் மட்டுமே இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த எஸ்பி செல்வகுமார் உடனடியாக தெற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் லதாவை மைக்கில் அழைத்து, ‘பாதுகாப்பு பணியில் ஒரே போலீஸ்காரர்தான் இருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் எங்ேக’ என்று கேட்டு டோஸ் விட்டுள்ளார். மேலும் ஆயுதப்படைக்கு மாற்றிவிடுவேன் என எச்சரித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அங்கு கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எஸ்பியிடம் டோஸ் வாங்கிய இன்ஸ்பெக்டர், அதை தனக்கு கீழ் உள்ள எஸ்ஐகள் மற்றும் போலீசாரிடம் காட்டி உள்ளார். அவர்களை கடுமையாக திட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட வைத்துள்ளார். இந்த சம்பவம் காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Southern Crime ,Division ,Vallur ,
× RELATED உள்ளூர் பார்க்கிங் தளங்களை...