குழந்தைகள் பாதுகாப்பு தினம்

ராஜபாளையம், பிப்.26: ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அரசின்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப்பணியாளர் ஜானகி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பங்கஜம், மனித வர்த்தகம் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் குரு சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் செய்திருந்தார்.

Related Stories:

>