தர்மபுரி, மே 1: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பட்டகப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மனைவி கோமதி (21). இவர்களுக்கு 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கோமதிக்கு சிறு வயதில் இருந்தே வயிற்று வலி பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், வீட்டில் தூக்கில் தொங்கினார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், கோமதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுபெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 8 மாதங்களே ஆவதால், வரதட்சணை கொடுமை காரணமா? என ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
