×

அகமதாபாத்தில் இன்று மோதல்; ஆர்சிபியை பழிதீர்க்குமா குஜராத்?

 

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30மணிக்கு நடைபெறும் 42வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-குஜராத் டைட்டன்ஸ் மோதுகின்றன. 8 போட்டியில் 6 வெற்றி, 2 தோல்வி என 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள ஆர்சிபி இன்று வெற்றியுடன் முதல் இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் விராட் கோஹ்லி 3 அரைசதத்துடன் 251 ரன் அடித்துள்ளார். தேவ்தத் படிக்கல் (242), கேப்டன் ரஜத் படிதார் (238) ஆகியோரும் பார்மில் உள்ளனர். பவுலிங்கில் புவனேஸ்வர்குமார் (14விக்கெட்), ஹேசல்வுட் வேகத்தில் மிரட்டுகின்றனர். சுழலில் குருணல் பாண்டியா எதிரணிக்கு நெருக்கடி அளிப்பார்.

மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் 8 போட்டியில் 4 வெற்றி, 4தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. இன்று சொந்த ஊரில் 5வது வெற்றிக்காக களம் இறங்குகிறது. பேட்டிங்கில் கேப்டன் கில், சாய்சுதர்சன், பட்லர் ஆகியோரை மட்டுமே நம்பி உள்ளது. பவுலிங்கில் வேகத்தில் ரபாடா, சிராஜ், சுழலில் ரஷித்கான் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இரு அணிகளும் இதற்கு முன் 7 முறை மோதி உள்ளன. இதில் 4ல் ஆர்சிபி, 3ல் குஜராத் வென்றுள்ளன. நடப்பு சீசனில் கடந்த 24ம் தேதி பெங்களூருவில் மோதிய போட்டியில் ஆர்சிபி வென்றது. அதற்கு இன்று சொந்த மண்ணில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் குஜராத் களம் இறங்குகிறது.

 

Tags : Ahmedabad ,Gujarat ,RCP ,Royal Challengers ,Bangalore ,Gujarat Titans ,IPL ,
× RELATED மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன்...