×

பள்ளியில் படிக்காமலேயே தேசிய திறனாய்வு தேர்வு எழுதி மாணவர்கள்

தொண்டி, பிப்.26:  தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. பள்ளி திறக்காமலே தேசிய அளவில் தேர்வு எழுதியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. பத்தாம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை மட்டுமே கடந்த மாதம் திறக்கப்பட்டது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு இன்னமும் பள்ளிகள் திறக்கப்பட வில்லை. இந்நிலையில் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நேற்று தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா விதிமுறைப்படி ஒரு அறைக்கு பத்து மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வருடமாக பள்ளிகள் திறக்காமல் நேற்று மாணவர்களுக்கு தேர்வு வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் தேர்வு எழுதுவதென்றால் ஓரளவாவது படித்திருக்க வேண்டும். ஆனால் இங்கு எதுவுமே நடைபெறவில்லை. தேர்வு மட்டுமே நடைபெற்றது. இதுகுறித்து மாணவர்களிடம் கேட்டபோது, கடந்த காலங்களில் போதிய பயிற்சி எடுத்து தேசிய திறனாய்வு தேர்வு எழுதினார்கள். இந்த வருடம் படிக்காமல் தேர்வு எழுதியது திருப்தியாக இல்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர். அரசு தன் கடமையை செய்வதற்கு முன்பு அதற்கான உரிய நடைமுறைகளையும் சரி செய்து கொள்ள வேண்டும் என்று ஆர்வலர்கள் கூறினர்.


Tags :
× RELATED தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு