திருமணம் முடிந்த இரவில் உடல்நலம் பாதிப்பால் இறந்த புதுமாப்பிள்ளை

சாயல்குடி, பிப்.26:  கடலாடி அருகே திருமணம் முடிந்த இரவே புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலாடி அருகே கடுகுசந்தை கிராமத்தை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும், முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி மகன் விக்னேஷ்வரனுக்கும்(23) கடந்த மாதம் நிச்சதார்த்தம் நடந்தது. விக்னேஷ்வரன் திருச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவரின் குடும்பம் சமயபுரத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் மணமகள் வீடு உள்ள கடுகுசந்தையில் திருமணம் நடந்ததால், செவ்வாய் கிழமை விக்னேஷ்வரன் குடும்பத்தினர் இளஞ்செம்பூர் வந்துள்ளனர். அப்போது விக்னேஷ்வரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் காலையில் கடுகுசந்தையில் விக்னேஷ்வரனுக்கும் திருமணம் முடிந்துள்ளது. பகல் முழுவதும் சோர்வுடன் காணப்பட்ட விக்னேஷ்வரனுக்கு இரவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை  உறவினர்கள் சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர், இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் மணமகள் உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர். திருமணம் முடிந்த அன்று இரவே மணமகன் இறந்த சம்பவம் உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>