பரமக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

பரமக்குடி, பிப்.26:  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பாக மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் ஆலோசனையின் பேரில், பரமக்குடி பேருந்து நிலையம் அருகே பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர்  தலைமையில் அதிமுக.வினர் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், நகர் பேரவைச் செயலாளர் வடமலையான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜெயசங்கர், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கார்த்திக், வார்டு செயலாளர் நாகராஜன் மற்றும் மாவட்ட மாணவர் அணி பொருளாளர் யோக மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர், சார்பாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்  ஜெயலலிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். இதில் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராமநாதன், ஒன்றிய மாணவரணி செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப நிர்வாகி இந்திரன், ஓவியர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜன் சார்பாக பரமக்குடியில் ஜெயலலிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஒட்டப்பாலம் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

பார்த்திபனூரில் சந்தன மாரியம்மன் கோவிலில் பரமக்குடி ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன், பார்த்திபனூர் நகர செயலாளர் வினோத் ஆகியோர் தலைமையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதற்கான சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. இந்த இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் முத்தையா, மாவட்ட துணை செயலாளர் பாதுஷா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தங்கவேல், அண்ணா தொழிற்சங்க முருகன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பரமக்குடி காமராஜர் நகரில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தினேஷ்  தலைமையில் அதிமுகவினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். போகலூர் ஊராட்சி தலைவர் கலையரசி பாலசுப்ரமணியம் தலைமையில், ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

நயினார்கோவில் ஒன்றிய அதிமுக சார்பாக ஒன்றிய செயலாளர் குப்புசாமி தலைமையில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வினிதா குப்புசாமி உள்ளிட்ட அதிமுகவினர் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். வாணிய வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் நாகநாதன் தலைமையில் அதிமுகவின் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். போகலூர் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி தலைமையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். மாலை பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் தனது வீட்டின் முன்பு ‘என் இல்லம் அம்மாவின் இல்லம்’ என உறுதிமொழி எடுத்து விளக்கேற்றினார்.

Related Stories:

>