×

பிரபந்தம், ஸ்தோத்திர பாடல் பாடுவதில் மீண்டும் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே தகராறு

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம், பாடல்கள் பாடுவதில் மீண்டும் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருஅவதார உற்சவம் எனும் பெருமாளின் பிறந்தநாள் விழா உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த, உற்சவத்தை முன்னிட்டு நேற்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மூலவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.

பெருமாளின் கருவறை மண்டபத்தில் அமர்ந்து, தாதாச்சாரியாரி பிரிவினர் பிரபந்தம் மற்றும் ஸ்தோத்திர பாடல் பாடுவதை வழக்கமாகவும், உரிமையாகவும் கொண்டுள்ளனர். ஸ்தோத்திரஇந்நிலையில், தாதாச்சாரியார் பிரிவினர் பாடல் பாடுவதில் தங்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் என கேட்டு தென்கலை ஐயங்கார்கள் பிரிவினர் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக ஏராளமான போலீசார், கோயில் கருவறை முன்பே குவிக்கப்பட்டனர். தாதாச்சாரி பிரிவினரும், தென்கலை ஐயங்கார் பிரிவினரும் ஆக்ரோஷமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெருமாளின் பிறந்தநாளில் பெருமாளை முதன்மையாக வணங்கும் இரு பிரிவினருக்கு இடையே, பெருமாளின் புகழைப்பாடும் பிரபந்தம் மற்றும் ஸ்தோத்திர பாடல் பாடுவதில் தகராறில் ஈடுபட்டது, பெருமாளை காண வந்த பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.

Tags : Vadakalai ,Thenkalai ,Stothira ,Chennai ,Kanchipuram Varadaraja Perumal Temple ,Thiruavathara Utsavam ,Lord ,Kanchipuram Varadaraja Perumal Temple… ,
× RELATED சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை...