×

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: அரை இறுதியில் 5 கோல் அசத்தலாய் வென்ற பிஎஸ்ஜி

பாரிஸ்: யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரையிறுதிப் போட்டியின் முதல் நிலை ஆட்டத்தில் நேற்று பிஎஸ்ஜி அணி, 5 கோல்கள் போட்டு பேயர்ன் எப்சி அணியை வீழ்த்தியது. யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகின்றன. பாரிஸ் நகரில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியின் முதல் நிலை ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மேன் (பிஎஸ்ஜி), பேயர்ன் மூனிச் எப்சி அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் போட்டி துவங்கியது முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். போட்டியின் 17வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை அட்டகாசமாக பயன்படுத்திய பேயர்ன் அணியி ஹேரி கேன் போட்டியின் முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார்.

அதற்கு பதிலடியாக, பிஎஸ்ஜியின் கவிசா கவரட்ஸ்கேலியா 24 மற்றும் 56வது நிமிடங்களில் கோல் போட்டு திணறடித்தார். அந்த அணியின் ஜவோ நெவெஸ் 33வது நிமிடத்திலும், அவுஸ்மேன் டெம்பெளே 45+5, 58வது நிமிடங்களில் இரு கோல்கள் போட்டனர். பேயர்ன் அணியின் மைக்கேல் ஒலிஸே 41, டேயோட் உபமெகானோ 65, லூயிஸ் டயாஸ் 68வது நிமிடங்களில் சீரான இடைவெளியில் கோல்கள் போட்டனர். அதனால், 5-4 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணி அபார வெற்றி பெற்றது. இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியின் முதல் நிலை ஆட்டத்தில் அத்லெடிகோ மாட்ரிட், ஆர்சனல் அணிகள் மோதவுள்ளன. அதைத் தொடர்ந்து வரும் மே 6ம் தேதி நடக்கும் அரையிறுதியின் 2ம் நிலை ஆட்டத்தில் ஆர்சனல், அத்லெடிகோ மாட்ரிட் அணிகளும், மே 7ம் தேதி நடக்கும் போட்டியில் பேயர்ன், பிஎஸ்ஜி அணிகளும் மோதவுள்ளன.

Tags : Champions League Football ,PSG ,Paris ,Bayern FC ,UEFA Champions League football ,UEFA Champions League ,France ,Paris… ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி..!