விருத்தாசலம், ஏப். 30: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வீராசாமி(55), விவசாயி. இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு தனது பைக்கில் சென்று விட்டு, திரும்ப வீட்டிற்கு கருவேப்பிலங்குறிச்சி- ஆண்டிமடம் சாலையில் சென்று கொண்டிருந்தார். பேரளையூர் பகுதியில் உள்ள டிராக்டர் கம்பெனி அருகே வந்த போது, திடீரென நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சந்தியா கொடுத்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
