பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் திமுக சைக்கிள் பேரணி

திருப்பரங்குன்றம், பிப்.26: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. திமுக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் நேற்று மாலை சைக்கிள் பேரணி நடைபெற்றது. திருப்பரங்குன்றம் தெற்கு பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமை வகித்தார். இந்த பேரணியில் வட்ட செயலாளர் காசிமாயன், பகுதி பொறுப்பாளர்கள் போஸ், மாரியப்பன், இளங்கோவன், இளந்தென்றல், விஜயகுமார், சாரதி, கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருநகர் 5வது ஸ்டாப்பில் துவங்கிய பேரணி திருநகர் வழியாக திருப்பரங்குன்றம் பூங்கா ஸ்டாப்பில் நிறைவடைந்தது. இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றிற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Related Stories:

>