×

வாழப்பாடியில் வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்

வாழப்பாடி, ஏப்.30: வாழப்பாடியில், வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் பெரியசாமி நகர் பகுதியில் தையல்நாயகி அம்மையுடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது. விழாவில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். வழி நெடுகிலும் அன்னதானம்- நீர் மோர் வழங்கப்பட்டது.

Tags : Vaithianatha ,Swami ,Temple ,Terotum ,Banapadi ,Valihappadi ,Vaithianatha Swami Temple Terota Ceremony ,Vaithianatha Swami Temple ,Banhapadi ,Chitra Festival ,Tayalnayagi Amma ,Peryasami Nagar ,Salem district ,
× RELATED குண்டுமல்லி விலை உயர்வு