பட்டிவீரன்பட்டி அருகே விபத்தில் இறந்த பெண்ணின் கணவருக்கு 2 லட்ச ரூபாய்

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள நெல்லூர் காலனியைச் சேர்ந்தவர் அகரத்தாய்(45). இவர் அய்யம்பாளையத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்  பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா தனிமனித காப்பீட்டில் சேர்ந்திருந்தார். கடந்த வருடம் விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். இந்நிலையில் கூலித்தொழிலாளியான இவரது கணவர் தன்னாசி அய்யம்பாளையம் வங்கிக்கு சென்று தனது மனைவி இறந்துவிட்டதால், இவரது கணக்கை முடிக்கும்படி கோரியுள்ளார்.

இவரது மனைவி காப்பீடு செய்த விபரம் தன்னாசிக்கு தெரியவில்லை. இவரது கணக்கை மேலாளர் பார்த்துள்ளார். அப்போது இறந்த அகரத்தாய் வங்கியில் ரூ.12 செலுத்தி காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக வங்கி மேலாளர் நடவடிக்கை எடுத்து, இந்த காப்பீடு மூலமாக கிடைத்த ரூ.2 லட்சத்திற்கான தொகைக்கான காசோலையை வங்கி முதன்மை மேலாளர் ஆறுச்சாமி, துணை மேலாளர் திருமலைநம்பி ஆகியோர் தன்னாசியின் வீட்டிற்கு நேரிடையாக சென்று வழங்கினர்.

Related Stories:

>