சாணார்பட்டி ஒன்றியப்பகுதிகளில் 1.35 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கு பூஜை திண்டுக்கல் எம்பி துவக்கி வைத்தார்

கோபால்பட்டி: சாணார்பட்டி ஒன்றியப் பகுதிகளில் ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் செலவில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான பூமி பூஜையை திண்டுக்கல்  எம்பி வேலுச்சாமி தொடங்கி வைத்தார். சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அஞ்சுகுழிப்பட்டி, கூவனூத்து. ஆவினிபட்டி, வேம்பார்பட்டி ஆகிய கிராமங்களில் பள்ளி சுற்றுச்சுவர், சிமெண்ட் சாலை , வண்ணக்கல் பதித்தல், உலர் களம் அமைத்தல் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜை திமுக மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் சாணார்பட்டி யூனியன் சேர்மன் பழனியம்மாள், ஒன்றிய செயலாளர் மோகன் உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>