மத்திய பஸ்நிலையத்தில் பயணிகள் தவிப்பு ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.71.56 லட்சம் காணிக்கை வசூல்

திருச்சி, பிப்.25: ரங்கம் ரங்கநாதர்கோயிலில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ 71.50 லட்சம் ரொக்கம், 398 கிராம் தங்கம் காணிக்கை கணக்கிடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கோயில்களும் அடைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வையொட்டி, கடந்த ஜூன் 1ம் தேதி கோயில்கள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ரங்கம் கோயிலில் கடந்த மாதம் 25ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் ரங்கம் கோயிலில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு கருடமண்டபத்தில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் அரசின் வழிகாட்டுதலின்படி காணிக்கை கணக்கிடப்பட்டது.

இதில் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஊழியர்கள் சோப்பால் கை, கால்களை நன்கு கழுவிய பின்னர், கைகளில் சானிடைசர் தெளித்த பின்னர் சமூக இடைவௌியில் உட்கார்ந்து காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.71 லட்சத்து 56 ஆயிரத்து 675 ரொக்கமும், 398 கிராம் தங்கம், 1,060 கிராம் வெள்ளி மற்றும் 52 வெளிநாட்டு கரன்சியும் செலுத்தி உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் தாண்டி கடந்த மாதம் உண்டியல் எண்ணிக்கை கோடியை தொட்ட நிலையில், இந்த மாதம் தங்கம் 219 கிராம் கூடுதலாக வந்துள்ளது. (கடந்த மாதம் 179 கிராம் தங்கம், தற்போது 398 கிராம் கிடைத்தது.)

Related Stories:

>