திருச்சி திருவெறும்பூரில் 170 பேர் கைது திருச்சி மலபார் கோல்டு ஷோரூமில் நகைகள் கண்காட்சி விற்பனை துவக்கம்

திருச்சி, பிப். 25: இந்திய பாரம்பரியமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் திருச்சி ஷோரூமில் நடைபெற்று வருகிறது. தலைசிறந்த நகை வடிமைப்பாளர்களால் சிறப்பாக வடிமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலும் உள்ளன.  இந்த கண்காட்சியை ராஜா மஹால் ஆண்டிமணி குடும்பத்தினர், பழனிவேலு - டாக்டர் சௌந்தரவள்ளி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இவர்களுடன் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திருச்சி  கிளை தலைவர் ஜோசப் பியுஸ், மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திருச்சி  கிளை துணை தலைவர் ஷேக் தாவூத் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். கலைநயமிக்க இந்த கண்காட்சி கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். இந்தகண்காட்சி 2021 பிப்.20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும். இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம் என மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

Related Stories:

>