அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டம்

திருத்துறைப்பூண்டி, பிப்.25: திருத்துறைப்பூண்டியில் நாகை மண்டல அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிற்சங்க நிர்வாக குழு கூட்டம் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல துணைத்தலைவர் ரவி தலைமை வகித்தார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் தங்கபாண்டியன், சந்திரசேகரன், வேதேஸ்வரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல பொதுச்செயலாளர் கோபிநாதன், இந்திய கம்யூ. ஒன்றிய செயலாளர் பாலு பேசினர். கூட்டத்தில் போக்குவரத்துக் கழகங்கள் நிலை குறித்தும் மண்டலத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுவது என்றும், வரும் சட்டசபை தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>