ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 5 வீரர்கள் காயம்

பொன்னமராவதி, பிப். 25: பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் புதுப்பட்டியில் பெரியகருப்பர் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 600 காளைகள் பங்கேற்றது. 195 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டை ஆர்டிஓ டெய்சிகுமார் துவக்கி வைத்தார். பின்னர் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. சீறி பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 5 வீரர்கள் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக்காசு, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, குக்கர், மிக்சி, மின்விசிறி உள்ளிட்ட பல பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

Related Stories:

>