புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்

புதுக்கோட்டை, பிப்.25: புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் கவிஞர் கதிரேசன் தலைமை வகித்தார். தேசிய கவிஞர் முனைவர் கஸ்தூரிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு அதிர்ஷ்டசாலிகளாக தேர்வு செய்யப்பட்ட 25 மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அறிவித்தபடி முழுக் கல்வி கட்டணச் சலுகை வழங்கப்பட்டது. முன்னதாக கல்லூரி முதல்வர் புகழேந்தி வரவேற்றார் . முடிவில் முதலாமாண்டு துறைத் தலைவர் விக்னேஸ்வரன் நன்றி கூறினார். விழாவில் அனைத்து துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>