×

ரோவர் கல்லூரியில் மின் வாகனம் தொடக்க விழா

பெரம்பலூர், பிப்.25: பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை,மின் மற்றும் மின்னணுவியல் துறை,மின்னணுமற்றும் தகவல் தொடர்பியல் துறை,ஒருங்கிணைந்து உருவாக்கிய மின் வாகனம் தொடக்க விழா நேற்று காலை10:30மணிஅளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரோவர் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். அறங்காவலா் மகாலட்சுமிவரதராஜன் சிறப்புரைஆற்றினார். துணைத்தலைவர் ஜான் அசோக் வரதராஜன் மின் வாகனத்தை இயக்கி,அனைவரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முதல்வா் பாலாஜி மின் வாகனத்தின் சிறப்பம்சங்கள் குறித்து கூறினார். உயர் கல்வி இயக்குனர் பாலமுருகன், துணைமுதல்வர் பெரியசாமி முன்னிலை வகித்தார். விழாவில் ரோவர் பொறியியல் கல்லூரி, தந்தை ரோவர் தொழில்நுட்பகல்லூரி மற்றும் தந்தைரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.விழாவில் இயந்திரவியல் துறைதலைவர் செல்வகுமார் வரவேற்றார். மின் மற்றும் மின்னணு துறைதலைவர்வெங்கடேசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறைதலைவர் பஜுலுநிஷா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை அலுவலக மேலாளா–்செந்தில்குமார் செய்திருந்தார்.

Tags : Electric Vehicle Opening Ceremony ,Rover College ,
× RELATED முதலாமாண்டு மாணவர்களுக்கு ரோவர்...