கரூரில் ஜெயலலிதா 73வது பிறந்த நாளை முன்னிட்டு சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

கரூர், பிப். 25: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அவரின் படத்துக்கு மாலை அணிவித்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல், கரூர் நகராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் மாவட்ட அதிமுக மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், நகரச் செயலாளர் நெடுஞ்செழியன் உட்பட அனைத்து அதிமுகவினர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>