×

கோயில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் அருகே பாதுகாப்பு மண்டலம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகம்

வாஷிங்டன்: நியூயார்க், ஜனநாயக கட்சி எம்பி டோம் சுவோஸி மற்றும் குடியரசு கட்சி எம்பி மேக்ஸ் மில்லர் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளனர். கோயில்கள்,குருத்வாராக்கள் உள்பட வழிபாட்டுத் தலங்களிலிருந்து 100 அடி தூரத்திற்குள், தங்கள் மத வழிபாட்டு உரிமையைப் பயன்படுத்தும் மக்களை, அச்சுறுத்துவதன் மூலமோ, அவர்களின் பாதையை மறிப்பது,அச்சுறுத்தும் நோக்கத்துடன் நெருங்குவது அல்லது துன்புறுத்துவதை ஒரு பெடரல் குற்றமாக்க வேண்டும் என்பதை இது நோக்கமாக கொண்டுள்ளது.

எம்பி டாம் சுவோஸி கூறுகையில்,‘‘யாரும் துன்புறுத்தப்படவோ அல்லது அச்சுறுத்தப்படவோ தகுதியற்றவர்கள், குறிப்பாக வழிபாட்டுத் தலத்திற்குச் செல்லும் வழியில் அவர்களை துன்புறுத்தக்கூடாது’’ என்றார். மில்லர் கூறுகையில்,‘‘ஒவ்வொரு அமெரிக்கரும் அச்சம், மிரட்டல் அல்லது துன்புறுத்தல் இன்றித் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை உள்ளது’’ என்றார்.

Tags : US Congress ,Washington ,New York ,Democratic Party ,Tom Suosi ,Republican Party ,Max Miller ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...