×

காரிமங்கலம் சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

காரிமங்கலம், ஏப்.29: காரிமங்கலம் வார சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பல்வேறு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 900 ஆடுகள், 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், ரூ.1 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை நடந்தது. ரூ.95லட்சத்திற்கு மாடுகளும், ரூ.5 லட்சத்திற்கு நாட்டுக்கோழி விற்பனையானது. நேற்று நடந்த கால்நடை சந்தையில் சுமார் ரூ.2கோடிக்கு கால்நடை வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடை வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல், திங்கட்கிழமை நடந்த தேங்காய் சந்தையில் ரூ.18 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது.

Tags : Karimangalam ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...