ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். பெகாசி திமூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் ரயில்மீது விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
