×

சர் பிட்டி தியாகராயரின் பணிகள்தான் இன்று நம்மை இயக்கும் திராவிட மாடல்: முதல்வர் புகழஞ்சலி

சென்னை: சர் பிட்டி தியாகராயர் ஆற்றிய பணிகள் தான் இன்று நம்மை இயக்கும் திராவிட மாடல் என்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் பிறந்தநாள். மாநகராட்சி மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்து சென்னையின் தொடக்கக் கால வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். எவர் மீதும் வெறுப்புணர்வைக் காட்டாத பண்பிற் சிறந்தவர். பார்ப்பனரல்லாதாரின் உரிமைகள், கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்காகத் தியாகராயர் ஆற்றிய பணிகள்தான் இன்றும் நம்மை இயக்கும் திராவிட மாடல். அதன் பயணம் மேலும் உறுதியோடு தொடரும்.

Tags : Sir ,Pity Thaikaraya ,Dravitha ,Chennai ,Pitti Thiagaraiyar ,K. Stalin ,Dimuka Chairman ,First Minister ,Mu. K. Stalin ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...