×

வேலூர் சுண்ணாம்புக்கார தெருவில் 1.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

வேலூர், பிப்.25: வேலூர் சுண்ணாம்புக்கார தெருவில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் தடை செய்யப்பட்ட 1.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூர் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள், தட்டுகள் என தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் ஓட்டல்கள், டீக்கடைகள், பங்க் கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் என அனைத்து இடங்களிலும் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின் பேரில் 2ம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 15க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் சுண்ணாம்புக்கார தெருவில் 3 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு கடையில் 1.5 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், கேரி பேக்குகள் என பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ₹2.50 லட்சம் ஆகும். மேலும் கடை உரிமையாளருக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : Vellore Limestone Street ,
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்