ஓக்லாந்து: உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் கடந்த 2015ம் ஆண்டு சாம் ஆல்ட்மேனுடன் இணைந்து ஓபன்ஏஐ நிறுவனத்தை தொடங்கினார். கூகுள் போன்ற பெரிய நிறுவனங்கள் ஏஐ துறையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க மனித குலத்தின் நன்மைக்காக லாப நோக்கமற்ற முறையில் பாதுகாப்பான ஏஐ-யை உருவாக்கும் நோக்கத்துடன் மஸ்க்-ஆல்ட்மேன் இந்நிறுவனத்தை தொடங்கினர்.
ஒருகட்டத்தில் ஓபன்ஏஐ நிறுவனம் ஆல்ட்மேன் கட்டுப்பாட்டில் வந்தது. மஸ்க் ஓபன்ஏஐ அறக்கட்டளையில் இருந்து வெளியேறினார். ஓபன்ஏஐ நிறுவனத்தை முதலாளித்துவ நிறுவனமான மாறிவிட்டதால், சுமார் 180 பில்லியன் டாலர் வரை நஷ்டஈடு கேட்டு ஆலட்மேனுக்கு எதிராக மஸ்க் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அமெரிக்காவின் ஓக்லாந்தில் உள்ள மத்திய நடுவர் மன்றத்தில் இன்று முதல் 4 வாரத்திற்கு விசாரிக்கப்பட உள்ளது. இதன் தீர்ப்பு சிலிக்கான் வேலியில் ஏஐயின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
