தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள்

ஆறுமுகநேரி,பிப்.25: ஆறுமுகநேரியில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மெயின் பஜாரில் நடந்தது. நகர செயலாளர் ரவிசந்திரன் தலைமை வகித்தார். நகர ஜெ.பேரவை செயலாளர் ராமசாமி, இளைஞரணி செயலாளர் நிவாஸ்கண்ணன்  முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் மரக்கன்று வழங்கினார்.  தொடர்ந்து ஆறுமுகநேரி ஸ்டேட் பங்க் அருகில் புதியதாக அமைக்கப்பட்ட அதிமுக கொடிகம்பத்தில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.   இந்நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் மகராஜன், மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், மனோகரன், முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ், பொருளாளர் காசிவிஷ்வநாதன், துணை செயலாளர்கள் பெரியசாமி, தயாவதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்:  ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் யூனியன் சேர்மன் செல்விவடமலைபாண்டியன் பூச்சிக்காடு, ஊத்தாங்கரைவிளை, தேரிகுடியிருப்பு, காயாமொழி, காயல்பட்டினம், திருச்செந்தூர் பஸ் நிலையம் அருகில் ஆகிய பகுதிகளில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அப்பகுதி பெண்க ளுக்கு சேலையும், பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் வாசுகி, செல்வன், அதிமுக மீனவரணி மாவட்ட தலைவர் ஜெபமாலை, ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, ஹரிகிருஷ்ணன் வடமலைபாண்டியன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்

தலைவர் சண்முகசுந்தரம், வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் லிங்ககுமார், ஒன்றிய மகளிரணி செயலாளர் ராணி, வீட்டுவசதி சங்க இயக்குநர்கள் இசக்கியம்மாள், லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்துங்கநல்லூர்: வல்லநாடு அருகே உள்ள தெய்வசெயல்புரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு கருங்குளம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும் ஒன்றிய துணைச்சேர்மனுமான லெட்சுமணப்பெருமாள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.  நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் கந்தசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பேச்சியம்மாள், மாவட்டகவுன்சிலர் பாலசரஸ்வதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நயினார் கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துராமலிங்கம், சுடலைமுத்து, முன்னாள் கவுன்சிலர் பிள்ளை முத்து, எஸ்கேஎஸ் செல்லத்துரை, மகளிரணி அவ்வையார், குமார், மணி, ராஜ்,ராஜேஷ்உட்பட கலந்து கொண்டனர். தொடர்ந்து வல்லநாடு, வசவப்புரம், சென்னல்பட்டி,உழக்குடி, சொக்கலிங்கபுரம், செக்காரக்குடி ஆகிய  இடங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி: ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி கோவில்பட்டி நகர, ஒன்றிய பகுதிகளில் அவரது படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனையின்பேரில் அதிமுக சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பஸ்நிலையம் அருகே, இளையரசனேந்தல் ரோடு, ஊரணி தெரு, தெற்கு திட்டங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதா படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்தந்த பகுதிகளில் அதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு மற்றும் பொங்கல் வழங்கினர். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள், நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, துணை தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, மாவட்ட விவசாய அணி செயலாளர் சோலைச்சாமி, துணைச் செயலாளர் மாரியப்பன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கணேஷ்பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், முன்னாள் யூனியன் துணைத்தலைவர் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>