திருவில்லிபுத்தூரில் பகலிலும் எரியும் தெருவிளக்குகள்

திருவில்லிபுத்தூர், பிப்.25:  திருவில்லிபுத்தூரில் கடந்த சில வாரங்களாக பகலிலும் தெருவிளக்குகள் எரிவதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.  திருவில்லிபுத்தூர் நகர்புறப்பகுதியில் உள்ள தெருவிளக்குகளை நகராட்சி பராமரித்து வருகிறது. மாலையில் போடப்படும் விளக்குகள் மறுநாள் அதிகாலை 6 மணி அளவில் அணைக்கப்பட்டு விடும். ஆனால் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது முக்கிய பகுதிகளில் தெரு விளக்குகள் அணைக்கப்படாமல் பகல் முழுவதும் எரியும் சூழல் உள்ளது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பகுதி மற்றும் முக்கிய பகுதிகளில் தெருவிளக்குகள் நேற்று பகல் முழுவதும் எரிந்தது.

Related Stories:

>