×

மதுரையில் மீண்டும் தீ விபத்து எலக்ட்ரானிக்ஸ் கடைகள் எரிந்து நாசம்

மதுரை, பிப். 25: மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை கடையில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்ததும் மதுரை மீனாட்சி கோயில் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேஷன் தலைமையில் 25க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ அருகில் உள்ள ஒரு ஷோரூம், 8க்கும் ேமற்பட்ட கடைகள், ஒரு குடோனுக்கும் தீ பரவியது. இதனால் தல்லாகுளம், அனுப்பானடி தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்களும் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணியை தாண்டியும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது. இந்த தீ விபத்தில் பல லட்சம் எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தன.

Tags : Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...