அம்மா மினி கிளினிக் திறப்பு விழா

திருவள்ளூர்:  பூண்டி ஊராட்சி ஒன்றியம், ராமதண்டலம் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கினார்.  விழாவில் ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் திறந்து வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். விழாவில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, சுகாதார பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் சைதண்யா, அதிமுக ஒன்றிய செயலாளர் இ.கந்தசாமி, ராமஞ்சேரி எஸ்.மாதவன், பி.எம்.பிரசாத், வக்கீல் எஸ்.வேல்முருகன்,  கே.ஜெயச்சந்திரன், ராஜசேகர், வார்டு உறுப்பினர்கள் மஞ்சுளா, சிவகாமி, அம்பிகா, சரண்யா, முரளி, ஞானப்பிரகாசம்,  நதியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>