×

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு நாளைக்கு ஒத்திவைப்பு!

டெல்ல: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in -ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இதற்கான தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய ‘சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப்’ ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்விற்காக (இளங்கலை மருத்துவப் படிப்பு) தயாராகி வருகின்றனர். வரும் மே 3ம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் பரவும் வினாத்தாள் கசிவு போன்ற தவறான வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று (ஏப். 26) வெளியாக இருந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in -ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதியை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். நீட் நுழைவுத் தேர்வு மே 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதற்காக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Tags : DELLA ,NEET ,National Examination Agency ,Medical Courses Union ,
× RELATED மேற்குவங்க மாநில சட்டசபை தேர்தலில்...