திமுக முன்னாள் எம்எல்ஏ இல்ல திருமணம்: டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்பு

செங்கல்பட்டு: திருப்போரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான  டி.மூர்த்தி இல்ல திருமண விழாவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்

திருப்போரூர் சட்டமன்றதொகுதி முன்னாள் எம்எல்ஏவும் திமுக பொதுக்குழு உறுப்பினருமான டி.மூர்த்தி-கோமதி தம்பதியின் மூத்த மகன் எம்.பிரதீப் - ஹரினி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மறைமலைநகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்எபி, திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை, மறைமலைநகர் நகரதிமுக செயலாளர் ஜெ.சண்முகம் வரவேற்றார்.

நகர திமுக துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஆல்பட், மாவட்ட பிரதிநிதிகள் கிரிசந்திரன், குணசேகரன், அசோகன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் டி.கே.கமல், நகர ஆதிதிரவிடர் நலக்குழு நிர்வாகி சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமண விழாவில் திமுக எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, இதயவர்மன், இ.கருணாநிதி, காஞ்சி வடக்கு  மாவட்ட நிர்வாகிகள் வெ.விஸ்வநாதன், கலைவாணி காமராஜ், அன்பு செழியன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் எம்.கே.தண்டபாணி, ஆராமுதன், நகர செயலாளர் எஸ்.நரேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் க.அன்புச்செல்வன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எம்.கே.டி.கார்த்திக், பேரூர் செயலாளர் ஜி.கே.லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories:

>