×

எட்டெக் லீட் நிறுவனம் சார்பில் நவீன கல்வி முறை அறிமுகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் தடையின்றி, தரமான கல்வி பயிலும் வகையில், எட்டெக் லீட் நிறுவனம் இந்த கல்வி ஆண்டில் நவீன கல்வி முறையை செயல்படுத்தி வருகிறது. இந்த கொரோனா காலத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் அச்சத்தை போக்கும் வகையில், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் (ஹைப்ரிட்) மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் (ஏபிஎஸ்) இந்த நவீன கல்வி முறையில் 2 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். 2021ம் ஆண்டுக்குள் மேலும் 3 லட்சம் மாணவர்களை இதில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முறையில் மாணவர்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ, உலகத்தரம் வாய்ந்த கல்வி கற்க முடியும். இதற்காக, இந்நிறுவன தலைவர் ‘கல் கே லியே கபில்’ என்ற பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதுகுறித்து லீட் மார்க்கெட்டிங் தலைவர் அனுபம் குரானி கூறுகையில், ‘‘இந்த முறையில் நவீன தொழில்நுட்பம், உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டம் மற்றும் சிறந்த கற்பித்தல் மூலம் மாணவர்களுக்கு கற்பதற்கான புதிய உத்வேகத்தை அளித்து, இறுதி தேர்வில் அவர்களின் வெற்றியை உறுதி செய்வதன் மூலம் இந்த இடைவெளியை குறைக்க முடியும்,’’ என்றார்.

Tags : Etech Lead Institute ,
× RELATED எட்டெக் லீட் நிறுவனம் சார்பில் நவீன கல்வி முறை அறிமுகம்