- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன் மின் தகவல்
- தில்லி
- அரசு
- ஆந்திரப் பிரதேசம்
- தெலுங்கானா
- கர்நாடக
- கேரளா
டெல்லி: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்பற்றாக்குறை அதிகரிக்கும் என மத்திய அரசு எச்சரித்து உள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களில் 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன், நடப்பாண்டு மார்ச் மாத மின்பயன்பாட்டை ஒப்பிட்டு, மின்தேவை விவரங்களை மத்திய மின்துறை ஒப்பிட்டு உள்ளது.
இதன்படி தென்மாநிலங்களின் தினசரி மின்தேவை 69,934 மெகாவாட்டிலிருந்து 73,805 மெகாவாட்-ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் 19,679 மெகாவாட்டிலிருந்து 19,822 மெகாவாட்-ஆக மின்தேவை கணிசமாக அதிகரித்து உள்ளது. புதுவையை பொறுத்த வரை 483 மெகாவாட்டிலிருந்து, 476 மெகாவாட்-ஆக மின்தேவை குறைந்து உள்ளது. மின் தேவை அதிகம் உள்ள தென் மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய மின்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மின்தேவையை முன்கூட்டியே மதிப்பீடு செய்து மின்பற்றாக்குறையை சமாளிக்க தேவைப்படும் அளவு மின்கொள்முதல் நடவடிக்கையை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில், கோடைக்கால வெப்பம் முன்கூட்டியே தொடங்கியிருப்பதாலும், தொழில்துறை வளர்ச்சியாலும், வெப்பத்தை தணிக்கும் குளிர் சாதனங்களை பயன்படுத்துவது அதிகரித்திருப்பதாலும், தினசரி மின்சாரத் தேவை கணிசமான உயர்வைச் சந்தித்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, தினசரி மின் நுகர்வு மற்றும் தேவையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. குடியிருப்பு மற்றும் வணிக துறைகளில் ஏற்பட்டுள்ள கணிசமான வளர்ச்சி காரணமாக தமிழ்நாடு மட்டும் ஆண்டுதோறும் 5 முதல் 8 லட்சம் புதிய மின் நுகர்வோரை புதிதாக சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதே போல் தமிழ்நாட்டின் மொத்த ஆற்றல் தேவை, அடுத்த 10 ஆண்டுகளில் ஏறத்தாழ 89% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2026-27 ஆம் ஆண்டில் சுமார் 1.48 லட்சம் MU-லிருந்து, 2035-36 ஆம் ஆண்டிற்குள் 2.80 லட்சம் MU-ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
