திமுக மாணவர் அணி நிர்வாகிகள் நியமனம்

சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை வடகிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக திருவொற்றியூர் பி.எஸ்.பரசுபிரபாகரன், விழுப்புரம் வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ரா.தயாளன் மரக்காணம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவரை மாணவர் அணி அமைப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக திண்டிவனம் எம்.டி.பாபு விழுப்புரம் வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* திமுக ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் க.சுந்தரம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை தென்மேற்கு மாவட்ட அமைப்பாளராக கோடம்பாக்கம் புலியூர் டி.மோசஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், துணை அமைப்பாளர்களாக கோடம்பாக்கம் இளவரசன், வடபழனி செந்தில்குமார், அம்மன் கோயில் தெரு சைதாப்பேட்டை டென்னிசன், எஸ்.கே.பி.புரம் சசிகுமார், மயிலாப்பூர் நாகேந்திரன், நாராயணசாமி தோட்டம் அசோக் குமார், தேனாம்பேட்டை மணிமாறன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>