×

திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்

திருத்துறைப்பூண்டி, பிப்.24: திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் நாகராஜன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருத்துறைப்பூண்டியில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்கெட்டிங் கமிட்டி வளாகத்தில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இதன் அருகில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் மார்க்கெட்டிங் கமிட்டி குடோன் ஆகியவையும் இயங்கி வருகின்றன. விவசாயிகள் பொதுமக்கள் காய்கறிகள் வாங்கவும் உரம் நெல் விதை மற்றும் விவசாய ஆலோசனை பெறுவதற்கும் இந்த வளாகத்திற்கு வருகிறார்கள். ஆனால் மார்க்கெட்டிங் கமிட்டி வளாகம் பராமரிப்பு இல்லாமல் பழைய கட்டிடங்கள் பகுதிகளில் காடுபோல் சீமைகருவேல மரங்கள் கோரைப்பற்கள் விஷச் செடிகள் மண்டிக்கிடக்கிறது. இதனால் நட்டுவாக்கிளி, விஷப் பாம்புகள் மற்றும் நல்ல பாம்புகள் உஷ்ணத்திற்காக உரம் மட்டும் நெல் மூட்டைகள் இடையே பதுங்கி உள்ளன. இதனால் விவசாயிகளும், நுகர்வோரும் காய்கறி வியாபாரிகளும். உள்ளே வர பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷப்பாம்புகள் உழவர் சந்தை வளாகத்தில் உள்ள கடைகளிலும் புகுந்து விடுகிறது. இது குறித்து திருத்துறைப்பூண்டி வேளாண் விரிவாக்க அலுவலகத்திலுள்ள உள்ள காடுகளில் புதர்களை அகற்றி விஷஜந்துக்கள் அண்டாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்ைக விடுத்துள்ளார்.

Tags : Thiruthuraipoondi Farmers Market ,
× RELATED திருத்துறைப்பூண்டி உழவர் சந்தையில்...