உலக தாய்மொழி நாள் கருத்தரங்கம்

மன்னார்குடி, பிப். 24: உலக தாய் மொழி நாளையொட்டி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் மன்னார்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. கிளை தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அண்ணாதுரை, செயலாளர் சந்திரசேகரன், துணைத் தலைவர் காந்திலெனின், துணை செயலாளர் முரளி, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர், என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ராஜப்பா ஆகியோர் தமிழ்மொழியின் தொன்மை மற்றும் சிறப்புகள் குறித்து பேசினர். தாய்மொழி நாள் சிறப்புக் கவிதைகளை கவிஞர்கள் நேருதாசன், அருணகிரி, தலைமை ஆசிரியை கோமதி ஆகியோர் வாசித்தனர். கருத்தரங்கத்தை கலை இலக்கியப் பெருமன்ற மாநில பொதுச்செயலாளர் காமராசு துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து, தமிழ் எங்கள் உயிர் எனும் தலைப்பில் தஞ்சை மன்னர் அரசு கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் சாமி சத்தியமூர்த்தி பேசினார். கிளை செயலாளர் தங்கபாபு வரவேற்றார். பொருளாளர் கோபால் நன்றி கூறினார்.

Related Stories:

>