×

டென்மார்க்கில் 2 ரயில்கள் மோதியதில் 5 பேர் படுகாயம்

கோபன்ஹேகன் : டென்மார்க்கில் அதிகாலையில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ஐந்து பேர் படுகாயமடைந்தனர். டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகனுக்கு அருகில் உள்ள கிரிப்ஸ்கோவ் என்ற நகருக்கு அருகே ஹிலேரோட் என்ற இடத்தில் இந்த ரயில் விபத்து நடந்தது. இதில் 2 இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலத்த காயமுற்றனர். விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்து அனைவரும் மீட்கப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நிகழ்ந்த இடம் கோபன்ஹேகனில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது. அருகே உள்ள கிரிப்ஸ்கோவ் என்ற நகரின் மேயர் டிரின் ஈகெட்வெட் கூறுகையில், உள்ளூர் ரயில் பாதையில் விபத்து நிகழ்ந்தது. இந்த ரயிலில் அரசு ஊழியர்கள், பள்ளி குழந்தைகள் பயணம் செய்தனர் என்று தெரிவித்தார்.

Tags : Denmark ,Copenhagen ,Hillerod ,Gribskov ,Copenhagen, Denmark ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...