×

டெக்சாஸ் பல்கலை.க்கு டெல் தம்பதியினர் ரூ.7,000 கோடி நன்கொடை

வாஷிங்டன்: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சிஇஓ மைக்கேல் டெல், அவரது மனைவி சூசன் டெல் இணைந்து வறுமையில் வாழும் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், கல்வி, சுகாதார மேம்பாட்டிற்காகவும் டெல் அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். இந்த அறக்கட்டளை மூலம் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள குழந்தைகளுக்கான டிரம்ப் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு நிதியளிக்க சுமார் ரூ.55 ஆயிரம் கோடி நன்கொடை அளிப்பதாக உறுதி அளித்தனர்.

இந்நிலையில், தற்போது ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைகழகத்திற்கு ரூ.7000 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர். இந்த நன்கொடை மூலம் பல்கலைக்கழகத்தில் புதிய புற்றுநோய் மருத்துவ மையமும், ஆராய்ச்சி வளாகமும் கட்டப்பட உள்ளது. இப்பணிகள் 2030ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.

Tags : Dell ,University of ,Texas ,Washington ,Michael Dell ,CEO ,Dell Technologies ,Susan Dell ,Dell Foundation ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...