×

இஸ்ரேல்,லெபனான் இடையே 2வது நேரடி பேச்சுவார்த்தை

பெய்ரூட்: இஸ்ரேல்-லெபனான் இடையே 2வது நேரடி பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனில் தொடங்கியுள்ளன. கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்தன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏப்ரல் 7ம் தேதி முதல் ஒரு போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதில் லெபனான் சேர்க்கப்படவில்லை. லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கும் போர் நிறுத்தம் வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியது.

இருப்பினும், இந்தக் கோரிக்கையை அமெரிக்காவும், இஸ்ரேலும் பொருட்படுத்தாமல் இருந்தன. இந்த நிலையில்,கடந்த வாரம் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் கடந்த 16ம் தேதி தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளின் தலைவர்களும் ஒப்பு கொண்டனர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க கோரி இஸ்ரேல்-லெபனான் 2வது நேரடி பேச்சுவார்த்தை வாஷிங்டன்னில் தொடங்கியுள்ளது. இதில் அமெரிக்காவுக்கான லெபனான் தூதர் நாடா ஹமதே மோவாத் மற்றும் இஸ்ரேல் துாதர் யெச்சில் லெய்ட்டர் பங்கேற்றுள்ளனர்.

லெபனான் அதிபர் ஜோசப் அவுன் கூறுகையில்,இஸ்ரேலியத் தாக்குதல்களை முழுமையாக நிறுத்துவது, லெபனானிலிருந்து இஸ்ரேலியப் படைகளைத் திரும்பப் பெறுவது, இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லெபனான் கைதிகளை விடுவிப்பது, எல்லைப் பகுதியில் லெபனான் படைகளை நிலைநிறுத்துவது மற்றும் புனரமைப்புப் பணிகளைத் தொடங்குவது ஆகியவையே எதிர்கால பேச்சுவார்த்தைகளின் நோக்கம் என்றார்.

Tags : Israel ,Lebanon ,Beirut ,Washington ,United States ,Iran ,Israel… ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...