×

சந்தைக்குள்ளேயே கடைகள் போட கோரிக்கை குப்பம் பெரிய காண்டியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

க.பரமத்தி, பிப்.24: க.பரமத்தி ஒன்றியம், குப்பம் கிராமத்தில் பெரியகாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அம்மன், விநாயகர், குன்னுடையான், பொன்னர், சங்கர், தங்காயி ஏழு கன்னிமார் ஆகிய சுவாமிகளுக்கு தினமும் ஒரு கால பூஜைகளும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி ஆராதனைகள் செய்யப் பட்டு பக்தர்களால் வழிபாடு செய்து வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் தமிழ் மாதத்தில் மாசி 10ம்தேதி மஹா பூஜை சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவிற்காக நேற்று முன்தினம் காலை 7மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பெரியகாண்டியம்மன், விநாயகர், குன்னுடையான், பொன்னர், சங்கர், தங்காயி ஏழு கன்னிமார், கருப்பண்ணார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தீபாராதனை நடந்தன.

Tags : Kuppam Big Kandiamman Temple ,
× RELATED வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும்...