உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

உசிலம்பட்டி, பிப். 24: உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் காட்டுராஜா, மாநில செயலாளர் முத்துகாந்தாரி தலைமையிலும், ஒன்றிய செயலாளர் சின்னசாமி, ஒன்றிய தலைவர் நாகராஜ் முன்னிலையிலும் ஆர்டிஓ அலுவலகத்தில் சமையல் செய்து குடியேறும் போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுடையவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் மாத உதவித்தொகை வழங்க வேண்டும்,அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீதமும், தனியார்துறையில் 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 100நாள் வேலை திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், திருக்கராஜ், நகர செயலாளர் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>