×

ஒட்டன்சத்திரத்தில் மழைநீர் தேங்கும் சப்வேயில் எம்பி ஆய்வு

ஒட்டன்சத்திரம், பிப்.24: ஒட்டன்சத்திரத்தில் மழைநீர் தேங்கும் பாதையை வேலுச்சாமி எம்பி பார்வையிட்டார். ஒட்டன்சத்திரம், பழநி சாலையில் திரையரங்கம் எதிரில் மற்றும் தெற்கு தோட்டம் செல்லும் பகுதியில் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் செல்லும் சப்வே சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த சப்வே காந்திநகரிலிருந்து ஒட்டன்சத்திரம் நகருக்கு செல்லும் முக்கிய வழியாக உள்ளது. பழநி சாலையிலிருந்து தெற்கு தோட்டம் செல்லும் சப்வேயை ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த விவசாயப் பயிர்களை எடுத்துச் செல்லவும், ஒட்டன்சத்திரம் நகருக்கு வந்து செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் இந்த இரு சப்வே முழுவதும் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு மாறிவிடுகிறது. மழைநீர் தேங்கும் காலங்களில் நகராட்சி மூலம் மோட்டார் வைத்து வெளியேற்றப்பட்டது. இது குறித்து பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி நேரில் பார்வையிட்டார். மழைநீர் தேங்காதவாறு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். திமுக நகர செயலாளர் வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் தேவிகா, சுகாதார ஆய்வாளர் வீரபாகு, நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Ottanchattaram ,
× RELATED தூய்மை நகராட்சியாக ஒட்டன்சத்திரம் தேர்வு: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்