×

எஸ்டிடியூ தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

பழநி, பிப்.24: பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பழநியில் எஸ்டிடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்திய பாஜ அரசை கண்டித்து பழநியில் எஸ்டிடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்டத் தலைவர் உமர் பாரூக் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் ஹபீப் ரஹ்மான் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சாந்து முகமது சிறப்புரையாற்றினார்.  எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் கைசர் அலி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மத்திய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags : STDU union protest ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...