×

கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

கயத்தாறு பிப்,24: உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரிகயத்தாறு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை 3ஆயிரமாக உயர்த்த வேண்டும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை 5ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஊனமுற்றோருக்கு தனியார் துறையில் 5 சதவீதம் வேலைவாய்ப்புவழங்க வேண்டும், அரசு துறைகளில் அனைத்து பணிநிலைகளிலும் அரசு ஒத்துக்கொண்ட 4 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்துவதை உறுதிபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.போராட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கருப்பசாமி தலைமை வகித்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் கேகேஆர் அய்யாத்துரை போராட்டத்தை தொடங்கிவைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மார்க்சிஸ்ட் கட்சி கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமோன் ராஜா சிறப்புரையாற்றினார். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சீனிப்பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், மதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மரைக்காயர், நகர இளைஞரணி வீரபுத்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Kayathar taluka ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ