×

நயினார் தொகுதியில் சந்திரபாபு நாயுடுவின் ரோடு ஷோ ‘வெறிச்’

 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அவர் பங்கேற்ற ரோடு ஷோ, மதுரை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி முக்குராந்தல் பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவிற்கு பொதுமக்களிடம் போதிய ஆதரவு இல்லாமல், சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் பாஜ நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். முன்னதாக தனியார் மண்டபத்தில், தெலுங்கு பேசும் மக்களிடையே நடந்த கூட்டத்தில், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக சந்திரபாபு நாயுடு வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசிய தெலுங்கு மொழி புரியாமல் மக்கள் குழப்பமடைந்தனர்.

Tags : Chandrababu Naidu ,Nainar constituency ,Andhra Pradesh ,Chief Minister ,BJP ,Nainar Nagendran ,Sattur ,Virudhunagar district ,Madurai ,Mukkuranthal ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...