×

செக் மோசடி வழக்கு என்எல்சி ஊழியருக்கு 3 மாத சிறை தண்டனை நீதிமன்றம் தீர்ப்பு

பண்ருட்டி, ஏப். 22: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார், விவசாயி. இவரிடம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 11ஐ சேர்ந்த என்எல்சி ஊழியர் சுருளிராஜன் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு ரூ.8 லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடனை திருப்பி கேட்டபோது கடன் தொகைக்காக காசோலை வழங்கியுள்ளார். காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.இதையடுத்து பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1ல், செல்வகுமார் கடந்த 2017ம் ஆண்டு வக்கீல் அருள் பிரகாசம் மூலம் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் நேற்று குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கீதா தீர்ப்பளித்தார். அதில் சுருளிராஜனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை, கடன் தொகையான ரூ.8 லட்சத்தை செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags : NLC ,Panruti ,Selvakumar ,Vallam ,Cuddalore district ,Surulirajan ,Neyveli ,Township ,Circle 11 ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...